துருக்கி தாக்குதலுக்கு ஐ.எஸ். உரிமை கோரல்

265 0

isபுது வருட தினத்தில் துருக்கி இரவு விடுதியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் உரிமை கோரியுள்ளனர்.

தீவிரவாதிகளினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில், தமது அமைப்பைச் சேர்ந்த ஒருவரினால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இஸ்தான்புல்லில் உள்ள இரவு விடுதி ஒன்றில் புதுவருட பிறப்பை கொண்டாடிக் கொண்டிருந்த சுமார் 600 பேரை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

இரவு விடுதிக்கு வாடகை மகளுர்ந்தொன்றில் சென்ற துப்பாக்கிதாரி பிரதான வாசலின் ஊடாக நுழையும் போது துப்பாக்கிப்பிரயோகம் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த துப்பாக்கிப் பிரயோகத்தின் போது 39 பேர் பலியாகினர்.

பலியானவர்களில் குறைந்தது 25 பேர் வெளிநாட்டவர் என துருக்கிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சிரியாவில் மேற்கொள்ளப்படும் இராணுவ நடவடிக்கைகளுக்கு துருக்கியே காரணம் என ஐ.எஸ். குற்றம் சாட்டி வருகின்றது.

இந்தநிலையில், சிரிய இராணுவ நடவடிக்கைகளுக்கு பழிவாங்கும் நோக்கிலேயே இஸ்தான்புல் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.