கொவிட் மரணங்களுக்கான பொறுப்புக் கூறலிலிருந்து அரசாங்கம் விலக முடியாது – சஜித் பிரேமதாச

189 0

நாட்டில் இதுவரை பதிவாகியுள்ள அதிகமான கொரோனா நோயாளிகளின் ; மரணத்துக்கு அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டும். இந்தப் பொறுப்பில் இருந்து விலகிக் கொள்ளுவதற்கான எந்தவொரு உரிமையும் அரசாங்கத்திற்கு இல்லை என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

வைரசுடன் போராட வேண்டியது விஞ்ஞான ரீதியாகவே அன்றி தன்னிச்சையான அரசியல் ரீதியாகவும்  மாயைகளை அடிப்படையாகக் கொண்ட மூட நம்பிக்கை மூலமும் அல்ல என்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

சிந்தித்து செயலாற்றும் எந்தவொருவரும் அதிர்ச்சிக்குள்ளாகுமளவுக்கு எமது நாடு சீர்குலைந்துள்ளது.

கடந்த வாரம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் அறிக்கையிடப்பட்ட மரணங்களின் எண்ணிக்கையை மாத்திரம் கணக்கில் எடுத்துக் கொண்டாலும் நாடு என்ற வகையில் நாங்கள் தள்ளப்பட்டுள்ள இடம் பயங்கரமானது, இருள்மிக்கது.

முன்மாதிரி நிலையிலுள்ள எவரும் இந்த நிலைமையை சிறந்ததென கருத மாட்டார்கள் ஆனாலும் அரசாங்கம் அது பற்றி எந்தவித கவனமும் எடுத்துக் கொள்ளவில்லை என்பது மட்டும் உறுதி.

இது வரை ஏற்பட்ட அதிகமான கொரோனா நோயாளிகளின்  மரணத்துக்கு அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டும் என்பதோடு இந்தப் பொறுப்பில் இருந்து அரசாங்கம் விலகிக் கொள்ளுவதற்கான எந்தவொரு உரிமையும் இல்லை.

கவலையான விடயம் யாதெனில் முதலாவது மற்றும் இரண்டாவது கொரோனா நோயாளிகள் இந்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டபோது எடுத்த நடவடிக்கைகளையாவது தற்போது பல்லாயிரக்காணக்கான கொரோனா நோயாளர்கள் காணப்படும் போது எடுக்கவில்லை.

அந்தளவுக்கு அரசாங்கம் இந்த பேரழிவின் அபாயங்களை கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை எனவும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.