#BREAKING முடங்குகிறது நாடு சுகாதார அமைச்சும் அறிவிப்பு

228 0

இன்று(20) இரவு 10 மணிமுதல் நாடு முடக்கப்படும் என சுகாதார அமைச்சர கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

ஆனால், அத்தியாவசிய சேவைகள் யாவும் இயங்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் நிலைமை காரணமாக இந்த தீர்மானம் முன்னெடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மகாநாயக்கர்களின் கோரிக்கைக்கு அமைவாக நாட்டை ஒருவாரத்துக்கு முழுமையாக முடக்குவதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார் என இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன கூறியுள்ளார்.

இதுதொடர்பில், மகாநாயக்கர்களுக்கு தெளிவுப்படுத்தியதன் பின்னர், நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி உத்தியோபூர்வமாக அறிவிப்பார் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.