முச்சக்கரவண்டியில் மோதுண்டு ஒருவர் உயிரிழப்பு!

192 0

ஹட்டன்  – நுவரெலியா பிரதான வீதியில், குடாகம பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொட்டகலை பகுதியிலிருந்து ஹட்டன் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று, குடாகம பகுதியில் வீதியை கடக்க முற்பட்டவர் மீது மோதியதில் நேற்றிரவு 7.30 அளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது பலத்த காயங்களுக்கு உள்ளான குறித்த நபர், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேற்படி பிரதேசத்தைச் சேர்ந்த  இரண்டு பிள்ளைகளின் தந்தையான 42 வயதுடைய நபர் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.