மெக்சிகோவில் கொரோனா உயிரிழப்பு 2.5 லட்சத்தைத் தாண்டியது

168 0

மெக்சிகோ நாட்டில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 31.52 லட்சத்தைக் கடந்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 21 கோடியைக் கடந்துள்ளது. 43 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 18 கோடிக்கும் மேற்பட்டோர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் மெக்சிகோ தற்போது 15-வது இடத்தில் உள்ளது.
இந்நிலையில், மெக்சிகோவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 32.52 லட்சத்தைக் கடந்துள்ளது. அங்கு கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2.50 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 24.86 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். 4.15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.