நல்லிணக்கம் இன்றி அபிவிருத்தி இல்லை – ஜனாதிபதி

290 0

09-e1436888118374-1024x648தேசிய இனங்களுக்கு இடையில் ஒற்றுமை இல்லாமல், நிலையான அபிவிருத்தியின் பலனை அடைய முடியாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற நிலையான அபிவிருத்தி யுகத்துக்கான நிகழ்வில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.

நாட்டினதும், சமுகத்தினதும் அபிவிருத்திக்கான இலக்கு அடையப்பட வேண்டும்.

ஆட்சியில் உள்ளவர்கள் அதிகாரத்தை பாதுகாத்துக் கொள்ள முயற்சிப்பதும், ஆட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் மீண்டும் அதிகாரத்தை பிடிப்பதற்கு முயற்சிப்பதும் தற்போது நாட்டுக்கு அவசியம் இல்லை.

தற்போது நாட்டின் அபிவிருத்திக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும்.

ஆனால் நாட்டில் சமுகங்களுக்கு இடையில் நல்லிணக்கமும், சமாதானமும் இல்லாமல் நிலையான அபிவிருத்தியை ஏற்படுத்த முடியாது என்று அவர் கூறியுள்ளார்.

இதேவேளை இந்த நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் கலந்து கொண்டு உரையாற்றினார்.

இதன்போது கருத்து வெளியிட்ட பிரதமர், இலங்கைக்கு பின்னர் சுதந்திரம் பெற்ற பல நாடுகள் தற்போது இலங்கையைக் காட்டிலும் முன்னேற்றம் கண்டுள்ளன என்றுசுட்டிக்காட்டினார்.

அபிவிருத்தி இலக்கை பல தடவைகள் அடைய முடியாமல் போயுள்ளது.

30 வருட யுத்தம் காரணமாக நாடு மிகவும் பின்தங்கியுள்ளது.

வறுமை ஒழிக்கப்படவில்லை.

தற்போது கிடைத்திருப்பதான இலங்கைக்கான இறுதி வாய்ப்பு என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.