ஜலாலாபாத்தில் பொதுமக்கள் போராட்டம்: தலிபான்கள் துப்பாக்கிச்சூடு

200 0

தலிபான்கள் ஆப்கானிஸ்தானின் முன்னாள் அதிபர் அமித் ஹர்சாய் உடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள நிலையில், ஜலாலாபாத்தில் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

ஆப்கானிஸ்தானின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்று ஜாலாலாபாத். இந்த நகரத்தை கைப்பற்றிய பின்னர்தான் தலிபான்கள் தலைநகர் காபூலை தங்கள் வசமாக்கினர். தற்போது ஆட்சியமைப்பதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறது.
முன்னாள் அதிபர் ஹமித் கர்சாய் உடன் இணைந்து தலிபான்கள் ஆட்சியமைக்கலாம் எனக் கூறப்படுகிறது. தலிபான் அரசியல் அலுவலக உறுப்பினர் இன்று ஹமித் கர்சாய் மற்றும் மூன்று முறை அதிபர் பதவிக்கு போட்டியிட்ட அப்துல்லா அப்துல்லா ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த நிலையில் ஜலாலாபாத்தில் பொதுமக்கள் சிறிய அளவில் கூடி நாட்டின் தேசியக்கொடியை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தலிபான்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் சிலர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தலிபான்கள் அதிகாரத்தை கைப்பற்றிய பிறகு நடத்தப்படும் முதல் துப்பாக்கிச்சூடு இதுவாகும்.