இந்திய கிரிக்கட் சபையின் தலைவர், செயலாளரை பதவி விலக உயர் நீதிமன்றம் உத்தரவு

368 0

bcci-720x480இந்திய கிரிக்கட் சபையின் தலைவர் அனுரக் தாகூர் மற்றும் செயலாளர் அஜே சிரேக் ஆகியோர் பதவி விலகுமாறு இந்திய உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

லோதா ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2013 ஐபிஎல் போட்டியில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல்கள் தொடர்பில் ஓய்வுபெற்ற நீதிபதி லோதா தலைமையில் ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டது.

இந்த ஆணைக்குழு, இந்திய கிரிக்கட் தொடர்பில் பரிந்துரைகளை முன்வைத்திருந்தது.

எனினும் இந்த பரிந்துரைகளை இந்திய கிரிக்கட் சபை நடைமுறைப்படுத்தாமை தொடர்பில் கடந்த விசாரணைகளின்போது கண்டனம் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.