பவித்ராவிடம் இருந்து சுகாதார அமைச்சு பறிப்பு – ஜே.வி.பி. குற்றச்சாட்டு

254 0

பவித்ராவிடம் இருந்து சுகாதார அமைச்சை பறித்து ஆசிரியர்களை “நாசமாய் போனவர்கள்” எனத் திட்டிய கெஹலிய ரம்புக்வெலவுக்கு வழங்கப்பட்டது என ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற கொரோனா வைரஸ் தொற்று தற்காலிக ஏற்பாடுகள் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“கொரோனா வைரஸ் தொற்று பரவுவதற்கு நாட்டில் கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்டப் போராட்டங்களே காரணம் என்று அரசு கூறுகின்து. நிதி அமைச்சராக பஸில் ராஜபக்ஷ பதவியேற்கும்போது நாடு முழுவதிலும் சந்திக்கு சந்தி மக்கள் ஒன்றுகூடி அதனைக் கொண்டாடினார்கள். அரசின் இத்தகைய செயற்பாடுகளால் நாட்டில் கொரோனா பரவவில்லையா?

எனவே கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்குத் தேவையான சரியான தீர்மானங்களை அரசு எடுக்க வேண்டும்

நாமல் ராஜபக்ஷவுக்கு மேலதிகமாக ஓர் அமைச்சுப் பதவியை வழங்க வேண்டும் என்பதற்காகவே இந்த அமைச்சரவை மாற்றம் இடம்பெற்றது” – என்றார்.