ஆட்சி நீடித்தால் ஆப்கான் நிலைமையே ஏற்படும்

179 0
தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சி தொடருமாக இருந்தால், ஆப்கானிஸ்தான் – காபூல் நகரில் மக்கள் விமானத்தில் ஏறி வெளிநாடுகளுக்குத் தப்பியோடுவதை  போன்ற நிலைமை இலங்கையிலும் ஏற்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தின் நேற்றைய (17) விவாதத்தில் கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய அவர், “அமைச்சரவை மாற்றத்தை பார்க்கும்போது சீட்டுகட்டு விளையாட்டே தனக்கு நினைவுக்கு வருகிறது” என்றார்.

“அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தனது அமைச்சு மாற்றப்பட்டதற்காக ஒப்பாரி வைக்கிறார். அமைச்சு பறிபோவது தனக்குத் தெரியாது என்கிறார். நாட்டை ஆட்சி செய்வதும், தீர்மானங்களை எடுப்பதும் கோமாளிகளே” என்றார்.

“பவித்ரா பலி கொடுக்கும் கதையைக் கூறியிருந்தார். இவர்கள் அனைவரும் இணைந்து நாட்டு மக்களையே பலி கொடுக்கிறார்கள்” என்றார். “தமிழர்கள் மட்டுமே தஞ்சம் கோரி இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு ஒரு காலத்தில் சென்றனர்.

ஆனால், இந்த அரசாங்கம் இப்படிப் போகுமாக இருந்தால் எதிர்காலத்தில்  சிங்களம்,
தமிழ், முஸ்லிம் என அனைவரும் தஞ்சம் கோரி வெளிநாடுகளுக்கு தப்பிச்  செல்லும் நிலைமை ஏற்படும்” என்றார்.