தொடர் போராட்டமே தலிபான்களின் வெற்றிக்குக் காரணம்’-பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன்

170 0

தலிபான்களின் தொடர் போராட்டமே அவர்களின் வெற்றிக்குக் காரணமெனத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன், எத்தனையோ சுதந்திர இயக்கங்களுக்கும், சுதந்திரத்துக்காகப் போராடும் இனங்களுக்கும் தலிபான்களின் விடுதலை மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.

வைரஸ (கொவிட் 19) தற்காலிக ஏற்பாடுகள் சட்டமூலம் மீதான நேற்றைய (17) பாராளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தலிபான்கள் இன்று ஆப்கானிஸ்தனை கைப்பற்றியிருக்கிறார்கள். அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறியதால் அவர்களுக்கு இந்த வெற்றிக்கிடைவில்லை. மாறாக தலிபான்களின் தொடர் போராட்டம் காரணமாகவே அவர்களுக்கு இந்த வெற்றி கிடைத்துள்ளது.

எத்தனையோ சுதந்திர இயக்கங்களுக்கும். சுதந்திரத்துக்காகப் போராடும் இனங்களுக்கும் தலிபான்களின் விடுதலை மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது எனவும் கூறினார்.

தலிபான்களின் போராட்டம் சரி தவறு என்பதற்கு அப்பால், அவர்களின் ஆட்சி மக்கள் சார்ந்ததா என்பதை காலம் தான் தீர்மானிக்க வேண்டும் என்றார்.