கேரளாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடைய 2 பெண்கள் கைது

196 0

ஆசியாவை சேர்ந்த இளைஞர்களை சமூக வலைதளங்கள் மூலம் மூளைச்சலவை செய்து ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தில் சேரவைக்கும் முயற்சியில் அந்த இயக்கத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.

ஈராக்கில் இருந்து செயல்படும் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய 2 பெண்களை கேரளாவின் கண்ணூரில் வைத்து தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) நேற்று கைது செய்துள்ளது.
விசாரணையில், அவர்கள் மிஜா சித்தீக் மற்றும் ஷிபா ஹாரிஸ் என அடையாளம் காணப்பட்டு உள்ளனர்.
இதுதொடர்பாக என்.ஐ.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த 2 பெண்களும் இன்ஸ்டாகிராம் மற்றும் பிற சமூக வலைதளங்களில் பக்கங்களை உருவாக்கி, ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் முஸ்லிம் இளைஞர்களை பணிக்கு அமர்த்துவது, அவர்களை ஊக்கப்படுத்துவது உள்ளிட்ட விஷயங்களில் ஈடுபட்டு உள்ளனர் என தெரிவித்துள்ளது.