60 மின்சார உற்பத்தி இயந்திரங்களை கொள்வனவு செய்வது குறித்து இலங்கை மின்சார சபை கவனம் செலுத்தியுள்ளது.
நாட்டில் அவசர மின்சாரத் தேவையொன்று ஏற்படுமாயின், அதற்கு முகங்கொடுப்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக நீர் மின்சாரம் உற்பத்தி செய்யும் நீர்த்தேங்களின் நீர் மட்டம் குறைவடைந்து வருகின்றது.
இந்த நிலையில், மின்சாரத் துண்டிப்பைத் தவிர்ப்பதற்காக மின்சார உற்பத்தி இயந்திரங்களைக் கொள்வனவு செய்யவுள்ள இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளது.
இதற்கான யோசகை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய ஆறு மாதங்களுக்கான மெகா வோல்ட் மின் உற்பத்தியை செய்யக்கூடிய 60 இயந்திரங்களை கொள்வனவு செய்யவுள்ளதாக அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.