மட்டக்களப்பில் 4 ஆயிரம் மாற்றுத் திறனாளிகள் வறுமையில்

311 0

201612142148227741_rajya-sabha-passes-bill-on-rights-of-differently-abled_secvpfமட்டக்களப்பு மாவட்டத்தில் 4 ஆயிரம் மாற்றுத் திறனாளிகள் வறுமையில் வாடுவதாக மட்டக்களப்பு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் ஒன்றியத்தின் செயலாளர் க. பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

இவர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

4 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் யுத்தத்தினால் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களது வாழ்வாதாரம், சுகாதாரம், பிள்ளைகளின் கல்வி, போன்ற அனைத்து விடயங்களும் மிகவும் கீழ் மட்டத்தில் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

யுத்தம் நடந்த கொண்டிருந்தபோது மாற்றுத்திறனாளிகளுக்கு 3 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கும் திட்டம் அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது.

இருப்பினும், யுத்ததினால் நேரடியாக பாதிக்கப்பட்டவர்கள் சிறிய அளவிலானோர் தான் இந்தத் திட்டத்தில் உள்வாங்ப்பட்டுள்ளனர்.

எனவே இந்த கொடுப்பனவை அரசாங்கம் மீள்பரீசீலனை செய்து யுத்ததினால் நேரடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு கட்டாயம் கொடுக்கவெண்டும் என பிரபாகரன் கேட்டுக்கொண்டுள்ளார்.