ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நிழல் அமைச்சரவையில் இருந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விலகியுள்ளதாக அமைச்சர் லக்ஷ்மண் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
கம்பஹா – தொம்பே பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
இந்த நிழல் அமைச்சரவையில் தற்சமயம் மூன்று ராஜபக்ஷர்கள் இருக்கிறார்கள்.
அதிகாரத்துக்கு வந்தவுடன் மேலும் மூன்று நான்கு ராஜபக்ஷர்கள் அமைச்சரவைக்கு பிரவேசிப்பார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
நாட்டை நிர்வகிக்க கூடிய ஒரேயொரு கட்சி ஐக்கிய தேசிய கட்சி என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் அமைச்சர் லக்ஷ்மண் கிரியெல்ல தெரிவித்தார்.