நல்லூர் வீதித் தடையில் மாற்றம்

180 0

நல்லூர் திருவிழாவினை முன்னிட்டு ஆலயத்தை சுற்றி ஏற்படுத்தப்பட்டிருந்த வீதித் தடைகளில் மாற்றத்தை ஏற்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் விசேட ஊடக அறிவிப்பு விரைவில் வெளியிடப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுமக்களின் வேண்டுகோளை அடுத்து ஆலயத்தை சூழவுள்ள வீதித்தடைகளில் மாற்றங்களை ஏற்படுத்துவது தொடர்பில் யாழ் மாநகர சபை முதல்வர் மணிவண்ணன் யாழ்ப்பாண பொலீசாருடன் இன்றைய தினம் நேரடியாக களத்திற்குச் சென்று கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

விசேட திருவிழாக்கள் மற்றும் பூசை நேரங்களை தவிர மீதி நேரங்களில் வீதிக் கட்டுப்பாடுகளில் தளர்வை ஏற்படுத்தவும் பொது மக்களை ஆலய சூழலில் உள்ள கடைகளுக்கு செல்லும் வகையில் அனுமதிக்கவும் இணக்கம் காணப்பட்டது.

இது தொடர்பில் விசேட ஊடக அறிவிப்பு யாழ் மாநகர சபையினால் விரைவில் வெளிவிடப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.