மஹிந்தவுக்கு ரவி கருணாநாயக்க மீண்டும் சவால்

515 0

thumb_large_ravi-karunanayake1முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பொருளாதாரம் தொடர்பான விவாதத்திற்கு வருமாறு நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க இன்று மீண்டும் சவால் விடுத்துள்ளார்.

பாலத்துறையிலுள்ள ஐக்கிய தேசிய கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் வெற் வரி 20 சதவீதமாக அதிகரிக்கப்பட்டிருந்தது.

மஹிந்த ராஜபக்ஷ பெற்ற வரிகளுக்காகவே வெற் வரியை அதிகரிக்க நேரிட்டுள்ளது.

அடுத்த வருடம் வெற் வரி குறைக்கப்படும் என்றும் நிதியமைச்சர் தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதாரத்தை விழுங்கிய மஹிந்த ராஜபக்ஷவை விவாதத்திற்கு வருமாறும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

விகாரைகளுக்கு சென்று கருத்துக்களை வெளியிடாது நாடாளுமன்றத்திலோ அல்லது பிறிதொரு இடத்திலோ விவாதத்திற்கு வருமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

நாமல், யோஷித்த, கோட்டபய, பஷில் என்னென்ன குற்றங்களை புரிந்திருக்கிறார்கள் என்பதை சுட்டிக்காட்ட தயார் என்றும் நிதியமைச்சர் ரவீ கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.