துப்பாக்கி சூட்டில் பாரிய காயமடைந்த சிறுமியின் சாதனை!

237 0

பிரித்தானியாவில் தனது மாமாவின் கடையில் வைத்து 2011 ம் ஆண்டு சுடப்பட்ட ஈழத்தமிழச்சி துஷா கமலேஸ்வரன் GCSE இல் 9 பாடங்களில் A* எடுத்து சாதனை- வெள்ளைக்காரரே வியந்து பாராட்டியுள்ளார்கள்.

லண்டனில் 10 வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற, துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்று, இன்னும் பல தமிழர்கள் மத்தியில் நீங்காமல் நினைவில் இருக்கிறது.துஷா கமலேஸ்வரன் என்ற 5 வயது சிறுமி தனது மாமாவின் கடையில் துள்ளி விளையாடிக் கொண்டு இருந்த வேளை,ஒரு குழுவுக்கு இடையே நடந்த மோதல்.

அந்தக் குழுவில் இருந்த நபர் சுட்ட குண்டு ஒன்று அவரது முள்ளம் தண்டை பதம் பார்க்க. அவர் உயிருக்கு போராடி, இறுதியில் காப்பாற்றப்பட்டார்.

ஆனால் அவரால் எழுந்து நடக்க முடியவில்லை. இருப்பினும் கடுமையாக உடல் பயிற்ச்சிகள் செய்து மெல்ல மெல்ல முன்னேறி வருகிறார். ஈழத் தமிழர்கள் படிப்பில் கெட்டிக்காரர்கள்,என்பது ஊர் அறிந்த விடையம்.ஆனால் இம் முறை இடம்பெற்ற O/L பரீட்சையில் துஷா பெரும் சாதனை படைத்துள்ளார் என்று ஆங்கிலப் பத்திரிகைகள் அவரைப் பாராட்டி உள்ளது.

இந்த ஈழத் தமிழச்சியால் முழு பிரித்தானியாவும்,ஒரு முறை தமிழர்களை திரும்பிப் பார்த்துள்ளது என்று தான் கூறவேண்டும்.9 பாடங்களில் அனைத்திற்கு 8 க்கு மேல் மதிப்பெண்களை அவர் எடுத்துள்ளார்