மஹரகம பொலிஸ் நிலையத்தில் கொவிட் கொத்தணி!

172 0
மஹரகம பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் பரிசோதகர், உப பொலிஸ் பரிசோதகர்கள் நால்வர் உட்பட 12 பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் அவர்களுடன் தொடர்பில் இருந்த 15 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மஹரகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அண்மையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் காயமடைந்த காரணத்தினால் பதில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தார்.