டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவாலுக்கு ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

185 0

டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் நீண்ட காலம் உடல்நலத்துடன் மக்கள் பணியில் ஈடுபட வாழ்த்துகிறேன் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

டெல்லி முதல்- மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். சமூக வலைதளங்களில் அவர் தெரிவித்துள்ள பிறந்தநாள் வாழ்த்து வருமாறு:-

அரவிந்த் கெஜ்ரிவால்

எனது இனிய நண்பரும் டெல்லி முதல்-மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகள். அவர் நீண்ட காலம் உடல்நலத்துடன் மக்கள் பணியில் ஈடுபட வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.