வடக்கு மாகாண பட்டதாரி ஆசிரியர்களுக்கு இன்று நியமனம் வழங்கும் வைபவம் வடக்கு மாகாண கல்வி அமைச்சில் நடைபெற்றது.
வடக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளர் இ.இரவீந்திரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் 72 பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமனங்கள் வழங்கிவைக்கப்பட்டன.
தமிழ் மொழிமூல பாடசாலைகளுக்கு 26 பட்டதாரி ஆசிரியர்களுக்கும் சிங்கள மொழிமூல பாடசாலைகளுக்கு 46 பட்டதாரி ஆசிரியர்களுக்குமாக மொத்தமாக 72 பட்டதாரிகளுக்கான ஆசிரியர் நியமனங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
தமிழ் மொழி மூல பாடசாலைகளில் மனைப்பொருளியல் கற்பிப்பதற்கு 26 பட்டதாரி ஆசிரியர்களும், சிங்கள மொழிமூல பாடசாலைகளில் சிங்கள மொழி கற்பிப்பதற்கு 18 ஆசிரியர்களும், ஆங்கில மொழி கற்பிப்பதற்கு ஆசிரியர் ஒருவரும் நியமிக்கப்பட்டள்ளனர்.
மேலும் வரலாறு பாடத்திற்காக 3 ஆசிரியர்களும், குடியுரிமைக்கல்வி பாடத்திற்காக 9 பேருக்கும் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் புவியியல் பாடத்திற்கு 3 பட்டதாரிகளும், தகவல் தொடர்பாடல் தொழிநுட்பம், விவசாயம், சங்கீதம் ஆகிய பாடங்களிற்கு தலா ஒவ்வொரு ஆசிரியரும் மற்றும் வழிகாட்டலும் ஆலோசனையும் பாடத்திற்கு 4 பேருமாக மொத்தமாக 72 பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமனம் கொடுக்கப்பட்டுள்ளது.
இன்றைய நியமனம் வழங்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண கல்வியமைச்சர் தம்பிராஜா குருகுலராஜா, சிறப்பு விருந்தினர்களாக வடக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.ஜயதிலக, வடக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் திருமதி ரூபினி வரதலிங்கம், வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எஸ்.உதயகுமார், மேலதிக மாகாணக் கல்விப்பணிப்பாளர் கே.பிறேமகாந்தன் மற்றும் வடக்கு மாகாண கல்வியமைச்சின் உதவிச் செயலாளர் பா.அபிராமி ஆகியோர் கலந்துகொண்டனர்.