ஆரம்பப் பிள்ளைகளுக்கான பருவ அபிவிருத்திப் பயிற்சி நிலையம் இன்று யாழ்ப்பாணம் கோண்டாவிலில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
ஆறுதல் நிறுவனத்தினால் ஆரம்பிக்கப்பட்ட மழழைகளுக்கான பயிற்சி நிலையம் திறந்து வைக்கும் நிகழ்வு ஆறுதல் நிறுவனத்தில் பிரதம நிறைவேற்று அதிகாரி சுந்தரம் டிவகலா தலைமையில் நடைபெற்றது.
ஆரம்ப பிள்ளைகளுக்கான பருவ அபிவிருத்திப் பயிற்சி நிலையமானது 2 தொடக்கம் 5 வயது வரையான மழலைகளுக்கும், 6 தொடக்கம் 8 வயது வரையான பிள்ளைகளும் ஆரம்ப பயிற்சினை வழங்கும் நிலையமாக அமைந்துள்ளது.
நிகழ்வில் மழலைகளுக்கான கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
திறப்பு விழா நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன், கௌரவ விருந்தினராக வடக்கு மாகாண கல்வி அமைச்சின் ஆரம்ப பிள்ளைப்பருவ அபிவிருத்திப்பிரிவின்
பணிப்பாளர் த.ஜெயக்குமாரி, சிறப்பு விருந்தினராக யாழ்ப்பாண கல்வி வலய ஆரம்பப் பிள்ளைப் பருவ அபிவிருத்திப் பிரிவின் உதவிக்கல்விப் பணிப்பாளர் க.விமலநாதன், மழலைகள் மற்றும் பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.