அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்- 58 பேருக்கு பணிநியமன ஆணை

192 0

அன்னை தமிழில் அர்ச்சனை’ என்ற திட்டத்தை தொடர்ந்து அனைத்து சாதியினரும் அர்ச்சகர் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்துச்சாதியினரும் அர்ச்சகராகும் வகையில் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி 1972ல் சட்டம் கொண்டு வந்தார். தற்போதைய திமுக அரசு இதனை நடைமுறைப்படுத்த தீவிர முயற்சி எடுத்தது.

இந்துவாக பிறந்து தகுந்த பயிற்சி முடித்த யாரும் அர்ச்சகராகலாம் என உச்சநீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்துள்ளது.

இந்நிலையில் ‘அன்னை தமிழில் அர்ச்சனை’ என்ற திட்டத்தை தொடர்ந்து அனைத்து சாதியினரும் அர்ச்சகர் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தின்கீழ் பயிற்சி முடித்த 24 அர்ச்சகர்கள் உள்பட 58 அர்ச்சகர்களுக்கு பணிநியமன ஆணையை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் திருமண மண்டபத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார்.

மேலும் அர்ச்சகர்கள், கோவில் பணியாளர்கள், ஓதுவோர் உள்பட மொத்தம் 216 பேருக்கு பணிநியமன ஆணை வழங்கினார்.