மலையகக் கல்விமான் மாரிமுத்துவின் இறுதிக் கிரியைகள் இன்று

179 0
கடந்த வெள்ளிக்கிழமை (13) உடல் நலக் குறைபாடால் உயிரிழந்த மலையகக் கல்விமானும் வட்டகொடை -தலவாக்கலை தோட்டத்தில் பிறந்தவரும் ஹட்டன்- ஹைலண்ட்ஸ் கல்லூரியிலிருந்து முதலாவதாக பல்கலைக்கழகத்துக்குச் சென்றவருமான, தி. வே. மாரிமுத்துவின்  இறுதிக் கிரியைகள் இன்று கொட்டகலையில் இடம்பெறவுள்ளது.

நாவலப்பிட்டி கதிரேசன், புசல்லாவை சரஸ்வதி, நுவரெலியா பரிசுத்த திரித்துவ கல்லூரி ஆகியவற்றின் முன்னாள் அதிபரும் முன்னாள் வட்டார கல்வி அதிகாரியும்,மத்திய மாகாண தமிழ்க்கல்வி,இந்து கலாசார அமைச்சின் முன்னாள் இணைப்புச் செயலாளருமான இவர், நுவரெலியா பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் மத்திய மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் முன்னாள் சிரேஷ்ட உறுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.