ஊழல் மோசடிகள் குறித்த விசாரணைகளுக்கு விசேட நீதிமன்றம்

269 0

ajith-p-pereraa-719x4801பாரியளவிலான ஊழல் மோசடிகள் தொடர்பிலான வழக்குகளை விசாரணை செய்வதற்கு இந்த ஆண்டில் விசேட நீதிமன்றமொன்றை நிறுவுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. நீதிமன்றங்களில் குவிந்து கிடக்கும் அதிகளவான வழக்குகள் காரணமாகவும் இதனால் வழக்குகள் விசாரணை செய்யப்படுவதில்லை என சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்கள் காரணமாகவும் தனியான நீதிமன்றமொன்றை நிறுவுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

வழக்கு விசாரணைகளை நடாத்துவதற்காக சில உயர் நீதிமன்றங்களை பயன்படுத்திக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் ஊழல் மோசடிகளுக்கு எதிரான நீதிமன்றமொன்று நிறுவப்பட உள்ளதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஊழல் மோசடிகளை இல்லாதொழிக்க விசேட நீதிமன்றமொன்றை உருவாக்குமாறு நாம் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கோரியிருந்தோம் என பிரதி அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார். இந்த உயர் நீதிமன்றை நிறுவுவதற்கு புதிதாக சட்டங்கள் அவசியமில்லை எனவும், உயர் நீதிமன்றங்கள் சிலவற்றை பெயரிட்டு அவற்றிற்கு மூவர் அடங்கிய நீதிபதிகளை நியமிப்பதன் மூலம் இந்த விசேட நீதிமன்றத்தை அமைக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.