கொழும்பில் இன்று நீர்வெட்டு !

179 0

கொழும்பின் சில பகுதிகளில் இன்று நீர் விநியோகம் தடை செய்யப்படுவதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, கொழும்பு 12,13,14 மற்றும் 15 ஆகிய பகுதிகளிலேயே இன்றையதினம் 9 மணிநேர நீரிவிநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

இன்று முற்பகல் 9 மணிமுதல் மாலை 6 மணி வரை இவ்வாறு நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் ஒருகொடவத்த – அம்பத்தல வீதியில் முன்னெடுக்கப்படுகின்ற திருத்தப்பணிகள் காரணமாக நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது