கிர்கிஸ்தான் ராணுவ தளபதியாக இந்திய வம்சாவளி தொழிலதிபர் நியமனம்

273 0

201701012007316335_indian-origin-appointed-to-top-military-post-in-kyrgyzstan_secvpfகிர்கிஸ்தான் நாட்டு ராணுவத்தின் மேஜர் ஜெனரலாக இந்திய வம்சாவளி தொழிலதிபர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவின் கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்தர் ஷேக் ரபிக் முகமது. ஆரம்பக் கல்வி மட்டுமே முடித்த இவர் இளம் வயதிலேயே மும்பை சென்று வேலை செய்து பல்வேறு தொழில் நுணுக்கங்களை கற்றுள்ளார். பின்னர் அங்கிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றுள்ளார். சவுதி, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், கிர்கிஸ்தான் ஆகிய நாடுகளில் தொழில் செய்தார். அவரது குடும்பம் துபாயில் வசிக்கிறது.

இந்நிலையில், கிர்கிஸ்தான் நாட்டு ராணுவ மேஜர் ஜெனரலாக ஷேயிக் ரபீக் முகமது நியமிக்கப்பட்டுள்ளார். அவரை பாதுகாப்புத்துறை மந்திரி அலி மிர்சா நியமித்திருப்பதாக கலீஜ் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்கு முன்பு கிர்கிஸ்தான் நாட்டில் பணியாற்றியதை கருத்தில் கொண்டு அவரை ராணுவ மேஜர் ஜெனரல் பொறுப்பை ஏற்கும்படி அரசு அழைப்பு விடுத்துள்ளது.

இதுகுறித்து கலீஜ் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில், “ஈரான் நாட்டிற்காக மிகப்பெரிய எஃகு ஆலையை ரபீக் அமைத்துக்கொண்டிருந்தபோது கிர்கிஸ்தான் முன்னாள் அதிபர் குர்மன்பெக்கை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன்பின்னர் அவர் மூலம் கிர்கிஸ்தான் நாட்டிற்கும் அதேபோன்ற ஆலையை அமைத்துக்கொடுத்தார். அத்துடன் கிர்கிஸ்தான் குடியுரிமை பெற்றார். அதிபர் தேர்தலில் குர்மன்பெக் வெற்றி பெற்றதும் ரபீக்கை தனது தலைமை ஆலோசகராக நியமித்தார்.

அவரது வாழ்க்கையில் இது ஒரு மைல்கல்லாகும். 5-ம் வகுப்பு படித்து முடிக்கும் முன்பே கேரளாவில் இருந்து குடிபெயர்ந்த ரபீக், சமீபத்தில் கிர்கிஸ்தான் ராணுவ மேஜர் ஜெனரலாக நியமிக்கப்பட்டதன் மூலம் உயர் பதவியை அடைந்துள்ளார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் வசிக்கும் கேரள மாநிலத்தவர்கள் ராணுவ பதவிக்கு வருவது மிகவும் அரிது என ரபீக்கின் ஊடக ஆலோசகர் தெரிவித்துள்ளார்.