மேற்கு வங்காளத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஆகஸ்ட் 31 வரை நீட்டிப்பு

198 0

கொரோனா வைரஸ் பரவலைக் கருத்தில் கொண்டு பல்வேறு மாநிலங்கள் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து வருகின்றன.

கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை காரணமாக தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்ததை தொடர்ந்து, மேற்கு வங்காளத்தில் கடந்த மே 16-ம் தேதி முதல் ஊரடங்கு  அமல்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த ஊரடங்கானது தொற்று பரவல் நிலைகளுக்கேற்ப அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மாநிலத்தில் விதிக்கப்பட்டிருந்த கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை மேலும் 15 நாட்களுக்கு நீட்டித்து மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும் தளர்வுகளுடன் கூடிய சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, திரையரங்குகள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நீச்சல் குளங்கள் மற்றும் விளையாட்டு அரங்குகள் 50 சதவீத பயனாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இரவு 10.30 மணி வரை மளிகை மற்றும் பலசரக்குக் கடைகள் இயங்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.