புருண்டி சுற்றுச்சூழல் மந்திரி சுட்டுக் கொலை

299 0

201701020840423986_police-arrest-in-connection-with-killing-of-burundian_secvpfபுருண்டி சுற்றுச்சூழல் மந்திரி இம்மானுவேல் நியோன்குரு சுட்டுக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக பெண்ணை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மத்திய ஆப்பிரிக்க நாடான புருண்டியில் 2015-ம் ஆண்டு அதிபர் பியரே நகுருன்ஜிஜா, மூன்றாவது முறையாக அதிபர் பதவிக்கு போட்டியிட்டதை தொடர்ந்து அங்கு அரசியல் கொந்தளிப்பு நிலவி வருகிறது. கடந்த ஓராண்டாக நடந்து வரும் அரசியல் கலகங்களில் 500 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 3 லட்சம் பேர் இடம் பெயர்ந்துள்ளனர்.

அங்கு நீர்வளம், சுற்றுச்சூழல், திட்டமிடல் துறை மந்திரியாக பதவி வகித்து வந்தவர், இம்மானுவேல் நியோன்குரு (வயது 54). இவர் நேற்று முன்தினம் நள்ளிரவுக்கு பின்னர் அவர் ரொஹரோ என்ற இடத்தில் உள்ள தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை அடையாளம் தெரியாத ஒருவர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுக்கொன்றார்.

இந்த தகவலை அந்த நாட்டின் போலீஸ் செய்தி தொடர்பாளர் பியரே நகுரிகியே, டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.அங்கு அரசியல் கொந்தளிப்பான நிலையில், பதவியில் உள்ள மந்திரி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பது இதுவே முதல் முறை. இந்த சம்பவம் தொடர்பாக ஒரு பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.சுட்டுக்கொல்லப்பட்ட மந்திரி இம்மானுவேல் நியோன்குரு குடும்பத்தினருக்கு அதிபர் பியரே நகுருன்ஜிஜா இரங்கல் தெரிவித்துள்ளார்.