மலையகத்தில் நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு!

166 0

மத்திய மலை நாட்டில் தொடர்ச்சியாக நிலவி வரும் சீரற்ற காலநிலையினை தொடர்ந்து நுவரெலியா மாட்டத்தில் கடும் மழை பெய்து வருகிறது.

நேற்று இரவு முதல் நுவரெலியா மாவட்டத்தில் பல பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக ஆறுகள் நீரோடைகள் ஆகிய பெருக்கெடுத்துள்ளன.

நீரேந்தும் பிரதேசங்களில் அதிக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதன் காரணமாக நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் உயர்ந்துள்ளன.