அதிகப்படியான கொரோனாச் சாவுகள்-ஒரே நாளில் 156 பேர் காவு

163 0

நாட்டை முடக்காவிட்டால் நாளாந்தக் கொரோனா மரணங்கள் தாறுமாறாக அதிகரிக்கும் என்று சுகாதார நிபுணர்களின் எச்சரிக்கைகளை அரசு பொருட்படுத்தாத நிலையில் நாடு உச்சக்கட்ட அபாயத்தை நோக்கி்ச் சென்றுகொண்டிருக்கின்றது. அந்தவகையில் நாளொன்றில் அதிகப்படியான கொரோனாச் சாவுகள் நேற்றுமுன்தினம் பதிவாகியுள்ளன. அதற்கமைய 156 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரச தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்து.

இதன்படி நாட்டில் கடந்த நான்கு நாட்களில் (08,09,10,11) மாத்திரம் 509 பேர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

இதையடுத்து நாட்டில் பதிவான கொரோனாக் காவுகளின் மொத்த எண்ணிக்கை 5 ஆயிரத்து 620 ஆக அதிகரித்துள்ளது.

நேற்றுமுன்தினம் சாவடைந்த 156 பேரில் 87 ஆண்களும், 69 பெண்களும் உள்ளடங்குகின்றனர்.

இதில் 13 பெண்கள், 22 ஆண்கள் என 35 பேர் 30 – 59 வயதுக்கு இடைப்பட்டவர்களாவர். 121 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்களாவர். இதில், 56 பெண்களும், 65 ஆண்களும் அடங்குகின்றனர்.