சென்னையில் 6 ஹோட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

181 0

சென்னையில் 6 ஹோட்டல்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தேர்வு முகாம் நடைபெறும் நிலையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

சென்னையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகாம்கள் 6 ஹோட்டல்களில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் ஹோட்டல்களில் வெடிகுண்டு வெடிக்கப்போவதாக ஒரு ஹோட்டலின் மின்னஞ்சலுக்கு மிரட்டல் வந்தது. இந்த வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து, சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.