முல்லைத்தீவு, ‘முள்ளிவாய்க்கால்’ என்ற சொற் பிரயோகங்கள் சர்வதேச சமூகத்தினாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் மாகாண சபை உறுப்பினர்களால் தமது சுய லாபங்களுக்காகப் பயனப்படுத்தப்பட்டு வருவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோதாரலிங்கம் குற்றம் சுமத்தியுள்ளார்.
வடமாகாண சபையின் புதிய உறுப்பினரான ஆண்டிஐயா புவனேஸ்வரனை வரவேற்கும் நிகழ்வு உடையார்கட்டு மகாவித்தியாலத்தில் நேற்று இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமை என்பது இன்றுவரைக்கும் கேள்விக்குறியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் முல்லைத்தீவு மாவட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களும், மாகாண சபை உறுப்பினர்களும் ஒன்றிணைந்து ஒரு முடிவை எடுக்காத நிலையே இன்று வரையும் தொடர்கின்றது.
மேலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் கட்சி சார்ந்து அல்லது எதிர்கால நலன் சார்ந்தே முடிவெடுக்கப்படுவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.