புதுவருட விபத்துக்களில் 7 பேர் பலி – 497 பேர் காயம்

278 0

accidents1புது வருட தினத்தில் இடம்பெற்ற பல்வேறு விபத்துக்களில் காயமடைந்த 497 பேர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

இவர்களுள் 179 மருத்துவமனையில் தொடர்ந்தும் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவருவதாக கொழும்பு தேசிய மருத்துவமனை தெரிவித்துள்ளது.

எனினும் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், புதுவருடத்தில் தேசிய மருத்துமனையில் பதிவாகியுள்ள விபத்துக்களின் எண்ணிக்கை 13 வீதத்தால் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வீதி விபத்துக்களின் காரணமாக நேற்றை தினம் மாத்திரம் 7 பேர் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.