அதிஸ்ட லாபச் சீட்டுக்களின் விலையை அதிகரிக்கும் அரசாங்கத்தின் தீர்மானம் குறித்து ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கலந்துரையாடவுள்ளதாக விற்பனையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
அதிஸ்ட லாபச் சீட்டுக்கள் விற்பனையாளர்கள் சங்கத்தின் தலைவர் கிரிஸாந்த மாரம்பகே தெரிவித்தார்.
அதிஸ்ட லாபச் சீட்டுக்களின் விலையை 20 ரூபாவிலிருந்நது 30 ரூபாவாக அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந்த தீர்மானத்துக்கு எதிர்ப்பு அதிஸ்ட லாபச் சீட்டுக்கள் விற்பனையாளர்கள் நேற்று பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிஸ்ட லாபச் சீட்டுக்களின் விலையை அதிகரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து விற்பனையாளர்கள் முன்னெடுக்கும் போராட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
விலையை அதிகரிக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்தை நடைமுறைப்படுத்தாத விற்பனையாளர்களுக்குப் பதிலாக புதியவர்கள் நியமிக்கப்படுவார்கள் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க நேற்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.