சீனாவில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்த 2 மருத்துவர்கள் உள்பட 16 பேருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
சீனாவில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்பவர்களுக்கு தேவையான உறுப்புகள் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களிடம் இருந்து எடுத்து பொருத்தப்பட்டு வந்தது.
இதற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தன.
அதை தொடர்ந்து கடந்த 2015ஆம் ஆண்டு முதல் இந்த நடைமுறை நிறுத்தப்பட்டது.
அதையடுத்து உடல் உறுப்புகள் சட்டப்படி தானமாக பெறப்பட்டு தேவைப்படுவோருக்கு பொருத்தப்படுகிறது.
இதனால் மாற்று சிறுநீரகம் தேவைப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
அதை பயன்படுத்தி சில மருத்துவர்கள் சட்ட விரோதமாக குறைந்த விலைக்கு சிறுநீரகங்கள் பெற்று பணம் சம்பாதித்து வருகின்றனர்.
எனவே கடந்த 2007ஆம் ஆண்டு முதல் மனித உறுப்புகள் விற்பனைக்கு சீனா தடை விதித்துள்ளது.
இருந்தும் சட்டவிரோதமாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சட்ட விரோதமாக சிறுநீரகம் மாற்று சத்திரசிகிச்சை செய்த 16 பேருக்கு 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
அவர்களில் 2 மருத்துவர்கள் மற்றும் மயக்க மருந்து நிபுணர் 14 பேர் உள்ளிட்டோர் அடங்குவர்.