வடகொரியா மற்றுமொரு ஏவுகணை பரிசோதனையை நடத்தவுள்ளதாக அந்த நாட்டு ஜனாதிபதி கிம் ஜொங் உன் அறிவித்துள்ளார்.
இந்த ஏவுகனை பரிசோதனை பணிகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளதாக கிம் ஜொங் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வருடத்தில் வட கொரியா இரண்டு ஏவுகனை பரிசோதனைகளை நடத்தியிருந்தது.
இந்த ஏவுகனை பரிசோதனைகள் எதிர்பார்த்த வெற்றியை அளிக்காத நிலையில் மற்றும் ஒரு பரிசோதனை நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வட கொரியாவின் அணு ஆயுத உற்பத்திக்கு சர்வதேச நாடுகள் கண்டனம் தெரிவித்துவருகின்றன.
வட கொரியாவின் இத்தகைய அணு ஆயுத உற்பத்தி முயற்சிகள் காரணமாக அந்த நாட்டின் மீது பொருளாதார தடைகளை விதிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.