பிறந்திருக்கும் புதிய வருடத்தில் 5 வயது தொடக்கம் 19 வயது வரையான பாடசாலை செல்லும் வயதுடைய மாணவர்களுக்கு இரண்டு இலட்சம் ரூபா சுகாதார காப்புறுதியைப் பெற்றுக் கொடுக்கவுள்ளதாக, நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
குடும்பத்திலுள்ள பிள்ளைகளின் எண்ணிக்கையை கவனத்தில் கொள்ளாது இந்த நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் 2017ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள சில யோசனைகள் இந்த புதிய ஆண்டில் இருந்து அமுல்படுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.