நெருக்கடியை தீர்க்க 3 வழிமுறைகள் – டிவ் குணசேகர

404 0

xxதற்போது நாடு முகம் கொடுத்துள்ள பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கு 3 வழிமுறைகள் காணப்படுவதாக இலங்கை கம்மியூனீச கட்சியின் பொது செயலாளர் டிவ் குணசேகர தெரிவித்துள்ளார்.
கேகாலையில் இடம்பபெற்ற நிகழ்வொன்றில கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
சர்வதேச நிதி நிறுவனங்களில் இருந்து ஏராளமாக கடன்கள் பெறப்படுகின்றன.
இந்த கடன்களே வெட் வரியாக அரவிடப்படுவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்தநிலையில் தற்போதைய பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கு நாணயத்தாள்களை அச்சிடல், வரியை அதிகரித்தல் மற்றும் மக்களின் வயிற்றுப் பட்டிகளை இறுக்கிக்கொள்வதே அந்த வழிமுறைகள் என அவர் குறிப்பிட்டார்.