கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியில் தகுதியான இராணுவத்தை இணைத்துள்ளோம்- கமல் குணரத்ன

191 0

கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிக்காக வைத்திய கல்வி கற்ற, அனுபவம் வாய்ந்த மற்றும் பயிற்சி பெற்ற இராணுவ ஊழியர்களையே ஈடுபடுத்தியதாகவும் பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி செலுத்துவது குறித்துத் தெரியாத குழுவினரை இதற் காக இணைத்துக் கொண்டுள்ளதாக சிலர் குற்றம் சாட் டியுள்ள தாக அவர் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசியைச் செலுத்துவதற்காக எறிகணை படை யைப் பயன்படுத்த மாட்டோம் என்றும் வைத்திய இராணுவ படை யினரிடமிருந்து தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளப்பயப்பட வேண்டாம் என்றும் பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி கிடைத்தவுடன் சுகாதார ஊழியர்களின் பணிப் பகிஷ் கரிப்பு முன்னெடுத்தமையால் மீண்டும் கொரோனா அலை ஏற் பட்டால் உயிருக்கு ஆபத்து என்பதைக் கருதி கொரோனா தொற் றைக் குறைக்க இந்த தடுப்பூசி திட்டத்தில் இலங்கை இராணுவ மருத்துவப் படையினர் தலையிட்டுள்ளதாக ஓய்வு பெற்ற ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.
அதன்படி, நாளாந்தம் 2000 முதல் 3000 பேருக்கு மாத்திரம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது என்றும் இராணுவத்தின் தலையீட்டை அடுத்தே ஒரு நாளைக்கு 5 இலட்சத்திற்கு மேற் பட்டோர்க்கு கொரோனா தடுப்பூசி செலுத்த முடிந்ததா அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.