சீனிக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது

153 0

இலங்கையில் பால்மா மற்றும் சமையல் எரிவாயுவிற்கு நிலவும் தட்டுப்பாட்டை தொடர்ந்து தற்போது சீனிக்கும் தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மே 28 ஆம் திகதி , அரசாங்கம் சீனி இறக்குமதியாளர்களுக்கு ஏற்கனவே இறக்குமதி செய்யப்பட்ட 600,000 மெற்றித்தொன் சீனி 08 மாதங்களுக்கு போதுமானதாக இருப்பதாக அறிவித்து சர்க்கரை இறக்குமதியை நிறுத்தியது.

அரசாங்கத்தின் மேற்படி நடவடிக்கையால் சீனிக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.

ஒரு கிலோவுக்கு 25 சதவிகித வரித் திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்படும் சீனி சரியான முறையில் சந்தைக்கு வெளியிடப்படவில்லை, இதன் விளைவாக சீனியின் விலையானது உயர்வடைந்ததுடன், ஒரு கிலோ சீனியானது 150 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது.

சீனியின் விலை அதிகரிப்பால் கையிருப்பை பேண முடியாது என சில்லறை விற்பனையாளர்கள் தெரிவிப்பதுடன், நுகர்வோரும் விலை உயர்வால் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.