பசில் ராஜபக்ஷவுக்கும் கட்சியின் பின்வரிசை எம்.பிக்களுக்கும் இடையில் இன்று சந்திப்பு

164 0

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கும், கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெறவுள்ளது .அலரிமாளிகையில் இன்று முற்பகல் 10 மணியளவில் இந்த சந்திப்பு இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாட்டின் தற்போதைய கொவிட்-19 பரவல் நிலை தொடர்பிலும், ஏனைய பிரச்சினைகள் குறித்தும், இதன்போது கலந்துரையாடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.