ரணில் விக்ரமசிங்கவின் யோசனையை நிராகரித்த மனோ கணேசன்

186 0

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தற்போது பல்வேறு அரசியல் சதுரங்க விளையாட்டுக்களை அரங்கேற்றி வருவதாக கூறப்படுகிறது.

இதில் ஒன்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையில் கூட்டணி ஒன்றை ஏற்படுத்துவது.

இந்தகூட்டணிக்காக ரணில் விக்ரமசிங்க, தமிழ் முற்போக்கு முன்னணியின் தலைவர் மனோ கணேசனனுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

எனினும் ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் மனோ கணேசன் அந்த யோசனையை நிராகரித்துள்ளதாக அறியவருகிறது.

ரணில் விக்ரமசிங்கவின் இந்த யோசனை சம்பந்தமாக மனோ கணேசன், ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

காரணம் ஒன்றை சுட்டிக்காட்டியே மனோ கணேசன், ரணில் விக்ரமசிங்கவின் யோசனையை நிராகரித்தமை குறித்து தெரியப்படுத்தியுள்ளார்.

ரணில் விக்ரமசிங்க சிறுபான்மை இனத்தவர்களை ஆதரித்தாலும் அவரால் சிங்கள மக்களின் வாக்குகளை பெற முடியாது என்பதால், அவர் இருக்கும் கூட்டணியால் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முடியாது என மனோ கணேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.

மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு முன்னணியில், ஐக்கிய மக்கள் சக்தியுடன் இருக்கும் முக்கியமான மலையக கட்சிகள் அங்கம் வகிக்கின்றன.