இலங்கை அரசின் இராணுவ மயமாக்கப்பட்ட போதைப் பொருளுக்கு எதிரான யுத்தம் – அம்பிகா சற்குணநாதன்

212 0

கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக, இலங்கை அரசாங்கமானது போதைப் பொருள் கட்டுப்பாடு தொடர்பில் இராணுவமயப்படுத்தப்பட்ட அணுகுமுறையை கையாள்கின்றது.

போதை பொருட்கள் மீதான யுத்தத்தில் இராணுவமானது விஷேடமான வகிப்பங்கினை கொண்டுள்ளதென இலங்கையின் முன்னாள் மனித உரிமைகள் ஆணையத்தின் ஆணையாளர்கள் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் காணப்படும் போதைப்பொருள் கட்டுப்பாடு தொடர்பான சட்டங்கள் பற்றிய ஆய்வினை எடுத்துப் பார்த்தால், சட்டக் கட்டமைப்பானது சிறந்த முறையில் போதைப் பொருட்களை கட்டுப்படுத்துவற்கு பொருத்தமற்றதாக காணப்படுவதாக இருக்கிறது.

<p>சட்டம் மற்றும் கொள்கையில் காணப்படும் முறைமைப்படுத்தப்பட்ட குறைப்பாடுகள் மற்றும் பொலிஸார் சட்டத்தை துஷ்பிரயோகம் செய்யும்போதும் தண்டனைக்குட்படுத்தப்படாமல் விடுவது சட்டத்தை மதிக்காத கலாச்சாரத்தை உருவாக்குகிறது.

இக்காரணங்கள் பொலிஸ் துறையினுள் கடுமையான தவறான நடத்தை மற்றும் முறைகேடுகளுக்கு இடமளிக்கின்றன

இது போதைப்பொருள் தொடர்பான குற்றத்திற்கு கைது செய்யப்பட்டவரின் உரிமைகளை பாதிக்கின்றன.

உதாரணமாக, சிறையில் உள்ள நபர்கள் பொலிஸார் தம் மீது போதைபொருள் மரங்களை நாட்டியதாக அடிக்கடி குற்றம்சாட்டினர்.

முக்கியமாக போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டவர்கள் பொலிஸ் காவலில் சித்திரவதைக்கும் மோசமான நடத்துகைக்கும் ஆளாக்கப்படுகின்றனர் என பரவலாக அறிக்கையிடப்பட்டுள்ளது.

குறிப்பாக பெண்கள் கைது செய்யப்பட்டவுடன் பலவந்தமான உடற் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

போதைப்பொருள் சார் குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டவர்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட பின்பும் பொலிஸாரால் இலக்கு வைக்கப்பட்டு தொந்தரவு செய்யப்படுகின்றனர்.

இலங்கைய அரசால் நிர்வகிக்கப்படும் மற்றும் தனியார் போதைப்பொருள் புனர்வாழ்வு மையங்கள் காணப்படுகின்றன.

கந்தக்காடு மற்றும் சேனாபுர என்பன அனைவராலும் அறியப்பட்ட மிக பெரிய மையங்களாகும். இராணுவத்தால் நடத்தப்படும் நிலையங்களில், சிகிச்சை ; என்ற பெயரிலோ அல்லது ;தண்டனை ; என்ற பெயரிலோ பரவலாக வன்முறை இழைக்கப்படுகிறது.

இந்த மையங்களில் சிகிச்சை பெறுபவர்கள் தங்கியிருக்கும் காலத்தில் முழுவதும் வன்முறை, முறையற்ற நடத்துகை மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு ஆளாகின்றனர்.

வன்முறைகள் மற்றும் தவறான நடத்துகைகள் தண்டனைக்காக அல்லது காரணமேயில்லாமல் அங்கு தடுத்து வைக்கப்படும் நபர்களின் மேல் இழைக்கப்படுகின்றன.

ஏதேனும் பிழை செய்தால் அல்லது எவரேனும் விதிமுறைகளுக்கு கீழ்படியாமல் இருந்தால் அந்த நபர்கள் அடிக்கப்படலாம், வயரால் தாக்கப்படலாம், பலாத்காரமாக அதிகமான புஷ் அப்கள் செய்விக்கப்படலாம் அல்லது வேறு வகையான உடற்பயிற்சிகளை செய்வதற்கும் ஆளாக்கப்படலாம்.

ஒரு சந்தர்ப்பத்தில், சண்டையில் ஈடுபட்ட நபரொருவர் மூன்று நாட்களுக்கு தான் மரத்தோடு இணைத்து விலங்கிடப்பட்டதாக கூறினார்.

அத்தருணத்தில் அவர் மூன்று நாட்களும் நின்றுக்கொண்டிருக்க வேண்டி நேரிட்டது. சாப்பிடுவதற்கும் கழிப்பறையை பயன்படுத்தவுமே அவர் விடுவிக்கப்பட்டார்.

உணவு மற்றும் நீர் என்பன அவருக்கு கொண்டு வந்து கொடுக்கப்பட்டதுடன் அவர் உறங்குவதற்கு அனுமதிக்கப்படவில்லை என அவர் மேலும் குறிப்பிட்டார்.