பிசிஆர் சோதனைகள் முன்னெடுக்கப்படாமையால் கொரோனா இறப்புக்கள் அதிகரிப்பு

186 0

கொரோனா தொற்றாளர்களை கண்டறிவதற்காக முன்னெடுக்கப்படும் பி.சி.ஆர் நிறுத்தப்பட்டதனைத் தொடர்ந்து, நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் இறப்புக்கள் அதிகரித்துள்ளதாக அரச மருத்துவ ஆய்வக நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பி.சி.ஆர் சோதனைகளின் எண்ணிக்கை மற்றும் தொடர்புடைய முடிவுகள் தொடர்பான அறிவியல் கணக்கெடுப்பு முன்னெடுக்கப்பட வேண்டும் என அச்சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

பிசிஆர் சோதனை இல்லாதது இறப்புகளின் எண்ணிக்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக நம்புவதாகவும், சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளுக்கு பிசிஆர் சோதனை நடத்தத் தவறியமை இறப்புக்களின் அதிகரிப்பில் பங்களிப்பு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

கர்ப்பம் தொடர்பான பிரச்சனைகள், விபத்து அல்லது மாரடைப்புக்காக காரணமாக மருத்துவமனைக்கு வருகை தருபவர்களிடம் பிசிஆர் அல்லது விரைவான என்டிஜென் சோதனையை முன்னெடுக்க வேண்டும்.