இதுவரை 45 ஆயிரம் சிறுவர்களுக்கு கொரோனா -மருத்துவர் நளின் கிதுல்வத்த

213 0

நாட்டில் தற்போது வரை அடையாளம் காணப்பட்ட கொரோனோ தொற்றாளர்களில் 45 ஆயிரம் சிறுவர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் வைத்திய நிபுணர் நளின் கிதுல்வத்த தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது வரை அடையாளம் காணப்பட்ட கொரோனோ தொற்றாளர்களில் 45 ஆயிரம் சிறுவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் அதில் 14 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர் என்றும் சிறுவர் வைத்திய நிபுணர் நளின் கிதுல்வத்த தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றுக்குள்ளான 20 ஆயிரம் சிறுவர்கள் 10 வயதை விடக் குறைந்தவர்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதால் நாடு முழுவதும் உள்ள அனைத்து வைத்தியசாலைகளின் சிறுவர் வார்ட்களின் கொள்ளவை மீறிவிட்டதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரி வித்துள்ளனர்.