தடுப்பூசிக்காக கர்ப்பிணிகள் வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை

210 0

பாலூட்டும் தாய்மார் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை தற்சமயம் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக மகளிர் மற்றும் மகப்பேற்று வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

1906 என்ற துரித தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பதன் ஊடாக எந்தவொரு வைத்தியசாலைக்கும் சென்று அவர்கள் தடுப்பூசியை ஏற்றிக் கொள்ள முடியும் என விசேட வைத்தியர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.

தடுப்பூசிக்காக இவர்கள் வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் விசேட வைத்தியர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்