குளியாபிடிய – இலுக்ஹேன பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வீட்டினுல் வைத்து பொல்லால் இவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இதில் படுகாயமடைந்த 53 வயதான குறித்த நபர், குளியாபிடிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளை பலியாகியுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் இவர் இலுக்ஹேன – குடாவெவ பகுதியைச் சேர்ந்தவராகும். குடும்பப் பிரச்சினை காரணமாகவே இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என, பொலிஸார் கூறியுள்ளனர்.
இதேவேளை சந்தேகநபர் அப் பகுதியில் இருந்து தப்பிச் சென்றுள்ளதோடு, அவரைக் கைதுசெய்வதற்கான விசாரணைகளை குளியாபிடிய பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.