சரியும் முட்டை விலை

215 0

நாமக்கல் மண்டலத்தில் ஒரேநாளில் முட்டை கொள்முதல் விலை 20 காசுகள் சரிந்து 4 ரூபாய் 50 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.நாமக்கல் மண்டலத்தில் கடந்த சில நாட்களாக முட்டை விலை குறைந்து கொண்டே வந்தது. கடந்த மாத இறுதியில் ஒரு முட்டை விலை ரூ.4.60 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

இந்நிலையில் வட மாநிலங்களில் பண்டிகை என்பதால் முட்டை விலை தொடர்ந்து குறைந்து வந்தது. அதே போல தமிழகத்திலும் ஆடி மாதம் என்பதால் முட்டை நுகர்வு குறைந்தது. இந்த நிலையில் பிற மண்டலங்களில் முட்டை நுகர்வையும் கருத்தில் கொண்டு முட்டை விலையில் மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

நாமக்கல் மண்டலத்தில் ஒரேநாளில் முட்டை கொள்முதல் விலை 20 காசுகள் சரிந்து 4 ரூபாய் 50 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.