சென்னை, கோடம்பாக்கத்தில் இன்று மற்றும் நாளை காலை 8 முதல் 11 மணி வரை போக்குவரத்து மாற்றம்

213 0

மெட்ரோ ரெயில் திட்டத்தை 2-வது கட்டமாக 118.9 கி.மீ. தூரத்துக்கு மொத்தம் 3 வழித்தடங்களில் தமிழக அரசு செயல்படுத்த உள்ளது.

சென்னையில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
முதல் கட்டத்தில், வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம் வரையிலான முதலாவது வழித்தடத்திலும் (23.1 கி.மீ. தூரம்), சென்னை சென்டிரலில் இருந்து புனித தோமையார் மலை வரையிலான 2-வது வழித்தடத்திலும் (22 கி.மீ. தூரம்) தற்போது மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், மெட்ரோ ரெயில் திட்டத்தை 2-வது கட்டமாக 118.9 கி.மீ. தூரத்துக்கு மொத்தம் 3 வழித்தடங்களில் தமிழக அரசு செயல்படுத்த உள்ளது. அதன்படி, மாதவரம் முதல் சிப்காட் வரை (பழைய மகாபலிபுரம் சாலையையொட்டி சிறுசேரி) 45.8 கி.மீ. தூரத்துக்கு மூலக்கடை, பெரம்பூர், அயனாவரம், கெல்லீஸ், கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி, நுங்கம்பாக்கம், ஆயிரம்விளக்கு, மயிலாப்பூர், அடையாறு, பெருங்குடி, துரைப்பாக்கம் வழியாக 3-வது வழித்தடமும், கலங்கரை விளக்கம் முதல் கோயம்பேடு (பூந்தமல்லி புறவழிச்சாலை வரை) 26.1 கி.மீ. தூரத்துக்கு ஆழ்வார்பேட்டை, நந்தனம், பனகல் பூங்கா, கோடம்பாக்கம், வடபழனி (ஆற்காடு சாலை), சாலிகிராமம் வழியாக 4-வது வழித்தடமும் அமைக்கப்பட உள்ளது.
இந்நிலையில்  2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்திற்காக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை, கோடம்பாக்கத்தில் இன்று மற்றும் நாளை காலை 8 முதல் 11 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.